Tuesday 29 November 2016

சின்ன கணக்குதான். ஆனா இடிக்குது!
******************************************
நான் ஒருவரிடம் 1000 ரூபாய் கடன் வாங்கினேன்.

உடனே அது தொலைந்து போக, இன்னொரு நண்பரிடம் 500 ரூபாய் கடன் வாங்கி 300 ரூபாய்க்கு இனிப்பு வாங்கினேன்.

பின்பு மீதமுள்ள 200 ரூபாயில் 1000 ரூபாய் தந்தவருக்கு 100 ரூபாயும், 500 ரூபாய் தந்தவருக்கு 100 ரூபாயும் திருப்பிக் கொடுத்தேன்.

இப்போது, 1000 ரூபாய் தந்த நபருக்கு ₹900 பாக்கி. 500 ரூபாய் தந்தவருக்கு ₹400 பாக்கி.

எனவே நான் திருப்பி கொடுக்க வேண்டிய மொத்த கடன்
900+400= ₹1300 ரூபாய். சரிதானே?

இனிப்பு வாங்கிய 300 ரூபாயையும் சேர்த்தால் 900+400+300=1600 ரூபாய். சரியா?

இப்போது, கேள்வி என்னவென்றால்
1500 தான் கடன் வாங்கினேன்.

எப்படி அது 1600 ஆக மாறியது..?

மேலதிகமான "₹100" எப்படி வந்தது என்பது தான் கேள்வி?

கணிதத்தில் நல்ல மார்க் எடுத்தவங்க இதற்கு ஒரு "விடையை" தயவுசெய்து சொல்லுங்களேன்.

No comments:

Post a Comment