Tuesday, 8 November 2016

அஸ்ஸாமு அலைக்கும், மலேசிய இந்திய முஸ்லிம் ஆசிரியர்கள் இயக்கம் இரண்டாவது ஆண்டாக மேற்காணும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆசிரியர்கள் இயக்கம் ஆங்காங்கே உள்ள இந்திய முஸ்லிம்  மதராசா மற்றும் பள்ளிவாசல் செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து மாணவர்கள், பெற்றோர்கள், சமுதாயத்துக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது மட்டுமின்றி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாகவும் துணையாகவும் செயல்படும்.
ஆக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இந்திய முஸ்லீம் இயக்கங்கள் எங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நம் சமுதாயம் நம் பங்கு என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

No comments:

Post a Comment